பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வந்து, அரைவட்ட அமைப்பில் - தலைவரை மதித்து வணங்கும் தன்மையில் நிற்பார்கள். அதைத் தொடர்ந்து போட்டியாளர்களிலே, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உடலாளர் வந்து, ஒலிம்பிக் உறுதிமொழியினை எடுப்பார், பொதுவாக, உறுதிமொழி எடுக்கும் உடலாளர், ஒலிம்பிக் பந்தயங்களை நடத்துகிற நாடடின் சிறந்த வீரராக இருப்பார்.

கொடியைப் பிடித்திருக்கும் அணித் தலைவர்களிருக்கும் மேடைக்கு வந்து, கொடியின் ஒரு முனையைப்பிடித்தவாறு, எல்லா போட்டியாளர்களின் சார்பாகவும், ஒலிம்பிக் உறுதிமொழியைக் கூறுவார்.

அந்த உறுதிமொழியாவது பொதுவாக, இப்படித் தான் அமைந்திருக்கும்.

உறுதிமொழி

ஒலிம்பிக் பந்தய விளையாட்டுக்களின் பண்பு நிறைப் போட்டிகளில் பங்கு பெறுகின்ற நாங்கள், நடைமுறை விதிகளை மனமார ஏற்றுமதித்து, நிறைந்த விருப்பத்தோடும், நிலையான உணர்வோடும், பெருந்தன்மையுள்ள போட்டியாளர்களாக நடந்து கொண்டு, நாட்டின் பெருமையும் விளையாட்டுக்களின் புகழும் வீறு பெற்று ஓங்கப் போட்டியிடுவோம் என்று உறுதி கூறுகிறோம்.

உறுதி மொழி எடுத்த பிறகு, ஒலிம்பிக் பந்தயங்களை நடத்துகிற நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும். அதன் பின், அணிவகுத்து நின்ற போட்டியாளர்கள், அரங்கினை விட்டு வெளியேறிச் செல்ல, முறையாகப் போட்டிகள் தொடங்கும்.

பரிசுகளாக பதக்கங்கள்

ஒவ்வொரு போட்டி நிகழ்ச்சியிலும் முதலாவதாக வரும் 3 பேர்கள் பரிசுகளைப் பெறுவார்கள்.