பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



கறுப்பு, பச்சை, சிவப்பு வண்ணக் கோடுகளால் உருவாக்கப் பட்ட சுற்றுக் கரைகளைக் (Borders) கொண்டிருக்கும். பந்தய இறுதி விழா நேரத்தின்போது, அடுத்து பந்தயம் நடைபெற இருக்கும் நாட்டில் உள்ள நகரமேயரிடம் ஒப்படைக்கும் விழாவுக்காக இக்கொடி சிறப்பாகத் தயாரிக்கப்படுகின்றது. இதனை அகில உலக ஒலிம்பிக் கமிட்டித் தலைவர், நகரமேயரிடம் வழங்கிட, அவர் அடுத்தப் பந்தயம் நடக்கும் வரை பாது காத்து வைத்திருப்பார். புனித ஒலிம்பிக் தீபம் ஆரம்ப காலத்தில், ஒலிம்பிக் பந்தயங்களைத் தோற்று வித்து, நடத்தி, பெருமை கொண்ட கிரேக்க நாட்டின் தலைப் பெருங் கடவுளான சீயஸ், அவரது மனைவி ஹீரா இவர்களை மகிமைப்படுத்தி பந்தயங்களைப் பெருமைப்படுத்துவதன் நோக்கமே ஒலிம்பிக் தீபமாக உருவெடுத்து அரங்கேறியிருக் கிறது. பழைய ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்ற சமயத்தில், சீயஸ் கடவுளின் பீடத்தில் தான் இந்த புனித தீபம் ஒளிர்ந்தது. புதிய ஒலிம்பிக் பந்தயங்கள் தொடங்கியபோது, பற்பல நாடுகளில் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததால், கிரேக்க நாட்டின் புனிதப் பகுதியிலிருந்து, சூரியனின் நேரடி ஒளியிலிருந்து பெறப்பட்ட நெருப்பினைக் கொண்டு, தீபம் ஏற்றி எடுத்துச் செல்லப்பட்டது. இந்தத் தீபம் ஏந்திச் செல்லும் முறை 1936ம் ஆண்டு ஜெர்மனில் ஒலிம்பிக் பந்தயம் நடந்த போது, மேற்கொள்ளப்பட்டது. அடுத்தடுத்து நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயங்களை நடத்திய மற்ற நாடுகள் யாவும், ஜெர்மனியின் செயற்கரிய முயற்சியைப் பின்பற்றி, கிரேக்க நாட்டிலிருந்தே தீபத்தைக் கொண்டுவந்து நிகழ்ச்சியை மேன்மைப்படுத்தின.