பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఒుతో நாடுகளில் உடற்கல்வி 81 மாவீரனின் தேசபக்தி கி.மு. 490ம் ஆண்டு கிரேக்க நாட்டின் மீது, பாரசீகத்தினர், படையெடுத்து வந்தனர். இரு நாடுகளுக்கிடையிலும் கடுமையான போர், மாரதான் எனும் இடத்தில் நிகழ்ந்தது. ஒரு சமயம், கிரேக்கப்படைகள் தோற்று விடும் என்ற நிலைமையில் இருந்து சமாளித்து, இறுதியில் பெரிய வெற்றியை அடைந்து, பாரசீகப் படையைப் பின்னோக்கி விரட்டி அடித்தன. இந்த வெற்றிச் செய்தியை, காத்துக்கொண்டிருக்கும் கிரேக்க மக்களுக்கு உடனே அறிவிக்கவேண்டும் என்று உணர்ச்சி வசப்பட்டான் தளபதி மிலிட்டிடாஸ் (Milititades), அவன் அங்கே இருந்த பிடிப்பைட்ஸ் (Phedippides) என்ற புகழ்பெற்ற ஒட்டக்காரனை அழைத்து வெற்றிச் செய்தியைப் போய் சொல்லிவிடுமாறு ஆணைப் பிறப்பித்தான். அந்த வீரனும் தான் ஏற்கனவே ஒடியும் போரிட்டும் களைத்துப்போயிருந்தாலும், தளபதியின் ஆணையை ஏற்று, மாரதான் என்று இடத்திலிருந்து ஓடினான். ஏதென்ஸ் நகரை ஓடி அவன் அடைந்தபோது, (அதாவது ஏறத்தாழ 27 மைல்களை ஒடிமுடித்தபோது) அங்கே காத்திருந்த நகரத் தந்தைகளை நோக்கி, மகிழுங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்று கூறிக்கொண்டே கீழே விழுந்து உயிர்விட்டான். அந்தப் பெருந்தியாக வீரன் பிடிப்பைட்ஸின் நாட்டுப் பற்று, உலகம் உள்ளவரை உயிர்பெற்று விளங்க, இந்த மாரதான் ஓட்டத்தை பந்தயங்களில் ஒன்றாக வைத்து சீரும் சிறப்புமாக நடத்தி வருகின்றனர். -