பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


குளிர்கால ஒலிம்பிக் பந்தயங்கள்,

ஒலிம்பிக் பந்தயங்கள் போலவே, குளிர்கால ஒலிம்பிக் பந்தயங்களும், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறுகின்றன. . ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெறுகின்ற ஆண்டில் தான் இப்பந்தயங்களும் நடைபெறுகின்றன. ஆனால் ஒரே சமயத்தில் ஒன்றாக நடப்பதில்லை. குளிர்காலப் பந்தயங்கள் என்பதால், தரையெல்லாம் பனிக்கட்டியாக உறைந்திருக்கும் இடத்தில்தான் பந்தயங்கள் நடத்தப்பெறும். இப்போட்டிகளில் உள்ள நிகழ்ச்சிகள் பனி வளைகோல் பந்தாட்டம் (Ice Hockey); பனிச் சறுக்கு விளையாட்டு (Skating); பனி ஊன்றுகோல் ஓட்டப்போட்டி (Skiling) முதலியன இடம் பெறுகின்றன. மிகக் குளிர் தேசங்களில் தான், குளிர்கால ஒலிம்பிக் பந்தயப் போட்டிகளை நடத்துவதற்கேற்ற நாடுகளாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. குளிர்கால ஒலிம்பிக் பந்தயங்கள் 1924ம் ஆண்டுதான் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டன. குறிப்பு, ஒலிம்பிக் பந்தயங்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள, ஆசிரியர் எழுதியுள்ள ஒலிம்பிக் பந்தயத்தின் கதை என்ற நூலைப் படிக்கவும்.