பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


1.பழங்கால ரோமானியர்கள்
2.தற்கால ரோமானியர்கள்

/. பழங்கால ரோமானியர்கள்

இவர்கள் காலம் கி.மு. 500 முதல் கி.மு. 146 வரை தொடர்கிறது. இந்தக் கால கட்டத்தில் ரோமானியர்கள், எதிர்ப்பட்ட நாடுகளையெல்லாம், வென்று தங்கள் ஆட்சியை விரிவுபடுத்திக் கொண்டு, மத்தியத் தரைக் கடல் பகுதி (Mediterranean) முழுவதுமாக விரிந்திருந்தார்கள்.

போர்க் கோலமே தங்கள் வாழ்க்கையின் பொற்கோலம், புகழ்கோலம் என்பதிலே அவர்கள் அதிகமாக நம்பிக்கை கொண்டிருந்ததால், அவர்கள் இராணுவ வாழ்க்கையில், எல்லையில்லா ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.

மக்கள் எல்லோரும், போர் வீரர்களாக மாற வேண்டும் என்பதுதான் அவர்களின் உடற்கல்விக் கொள்கையாக விளங்கியது. மிகவும் கட்டுமஸ்தான தேகம், வலிமை மிகுந்த தேகம், மிகவும் குரூரம் நிரம்பிய போர் வீரர்கள் என்று இப்படித்தான் மக்களை மாற்றி அமைக்க நமது உடற் கல்வி உதவ வேண்டும் என்றே அவர்கள் விரும்பினார்கள். கிரேக்கர்களைப் போல, கட்டுமஸ்தான, கலை நிரம்பிய, கவினுறு தேகம் வளர்த்து, உள்ளத்தையும் வளர்க்கும் உன்னதமான உடலமைப்பில், ரோமானியர்களுக்கு சிறிதளவும் நம்பிக்கையேயில்லை.

பிள்ளைகளும் கல்வியும்

ரோமானியர்களின் வாழ்க்கை அமைப்பு, மேற்கொண்ட அணுகு முறைகள் எல்லாமே, கிரேக்கர்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதை இனிவரும் பகுதிகளில் நீங்கள் இன்னும் நன்றாக உணர்ந்து கொள்ள முடியும்.