பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

85



இளம் சிறுவர்களின் கல்வி போதனை எல்லாம், அவரவருடைய பெற்றோர்களின் பொறுப்பிலே விடப்பட்டது. அதாவது இல்லங்களே இளைஞர்களுக்குப் பள்ளிகளாக விளங்கின. அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசான்காளக, தாயும் தந்தையுமே பொறுப்பேற்று உள்ளனர்.

மதக் கோட்பாடுகு பெற்றதுந்தாலும் சரி, அல்லது நன்னெறி வளர்க்கும் வா விளையறகளாக இருந்தாலும் சரி, அன்றாட வாழ்வில் அற்களில் அம் தரும நெறிகள் வரை அத்தனையும், பெற்றோர்கபடமிருந்தே பிள்ளைகள் பெற்றுக் கொண்டனர். கற்றுக் கொண்டனர்.

இராணுவப் பயிற்சிகள் மற்றும் விளையாட்டுக்கள் எல்லாம் கற்றுக்கொள்ளும் களமாக, பொதுத்திடல் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. அதற்கு கேம்பஸ் மார்ட்டியஸ் (Campus Martius) என்று பெயர்.

ரோமானியர்களின் போர்த் தெய்வமாக விளங்கிய மார்ஸ் (Mars) என்ற கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அந்த கேம்பஸ் மார்ட்டியஸ் திடலில்தான், எல்லாப்போர்ப் பயிற்சிகளும், போர்க்கலைகளும் கற்பிக்கப்பட்டன. அதே திடலில், போர் வீரர்களுக்கு இராணுவப் பயிற்சிகளும், போர் முறைகளும் கற்பிக்கப்பட்டன. ரோமானியர்களின் உடற்கல்வி முறை, போருக்குப் பிள்ளைகளை ஆயத்தப்படுத்தும் அக்கறை யுடனே கற்பிக்கப்பட்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது.

பிள்ளைகளைப் பெற்றுத் தரும் தாய்மார்கள், பெருமையுடன் மதிக்கப்பட்டார்கள். போற்றப்பட்டார்கள். பெற்றக் குழந்தையானது வலிமையானது தானா, வலிமையுடன் வாழ்வதற்கு தகுந்ததுதானா என் பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு தந்தையிடமே விடப்பட்டது.

வலிமையுடன் குழந்தை பிறந்திருந்தால் வளர்ப்பதற் கும், வலிமையற்ற பலஹீனமுள்ள குழந்தையாக இருந்தால்,