பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடுகளில் உடற்கல்வி

87



இளைஞர்களும் விளையாட்டுக்களும்

இளைஞர்கள் பலதரப்பட்ட விளையாட்டுக்களில் பங்கு பெற்று மகிழ்ந்தனர். பிரம்பு வளைய வண்டிகள், சாட்டைச் சொடுக்கல், தந்தத்தாலான பொம்மைகள், பொம்மைக் குதிரை ஆட்டங்கள், பொம்மை வீடுகள் கட்டி விளையாட்டு களில் சிறுவர்கள் பங்கு பெற்றது போல, கண்ணா மூச்சி ஆட்டம், கண்கட்டி விளையாட்டு, வாத்து நடை விளையாட்டு, கூழாங்கற்களில் ஆடுதல் முதலியவற்றிலும் மகிழ்சியுடன் ஈடுபட்டனர்.

ரோமானியர்கள் வரலாற்றைத் துல்லியமாக ஆராய்ந்து பார்த்தால், பந்து விளையாட்டுக்கள் அவர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்து தொடர்புகொண்டிருப்பது நன்கு புரியும்.

பல்வேறு வடிவில், அளவில், பந்துகள் பயன்பட்டிருக் கின்றன. சில பந்துகள் முடியால் (Hair) நிரப்பப்பட்டும், சில பந்துகள் இறகுகளால் அமைக்கப்பட்டும் சில பந்துகள் காற்றால் நிரப்பப்பட்டும் அமைந்திருக்கின்றன.

ஒரு சில பந்துகளை மேலே போட்டு, ஒன்று மாற்றி ஒன்றைப் பிடித்தாடும் கெட்டிக்காரத்தனமான ஆட்டமும் பிரபலமாக இருந்திருக்கிறது.

நாட்டியம் மேட்டுக் குடிமக்களால் மட்டுமே பங்குபெறும் கலைச் செல்வமாக இருந்தது என்றாலும், நடனம் ஒரு பிரபலமான அம்சமாகவே ரோமில் நடமாடியிருக்கிறது. அந்த அளவுக்கு வசதியானவர்களின் வசம் நடனம் வசமாயிருந்திருக்கிறது.

ரோமில் விடுமுறை நாட்கள் விடப்படுகிறது என்றால், எப்பொழுது எல்லாம் குதிரைப் பந்தயங்களும் தேரோட்டப் போட்டிகளுமே மிகுதியாக இருந்தன, அவை விடுமுறை விளையாட்டுக்களாகப் புகழ் பெற்றுக் கொண்டன.