பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உலக நாடுகளில் உடற்கல்வி

91



இப்படியாக, இளைஞர்களை சக்தி வாய்ந்தவர்களாக உருவாக்கும் அரசுக் கொள்கை தொலைந்து போயிற்று, ஏற்கெனவே உடலைப் பற்றிய பாடம் எதுவும் இல்லாததால், சமுதாயத்தில் கல்வியானது கல்விக்காகவே என்ற சாதாரண நிலைக்குதலை சாய்ந்து விட்டது.

அறிவு தான் பிரதானம் என்ற கொள்கை வந்த பிறகு, அறிவுள்ளவர்களுக்கு மட்டுமே மக்களிடையே மரியாதை கிடைத்தது. இதனால், அறிவாளிகளின் (Orators) பேச்சைக் கேட்பதிலே மேலும் ஆர்வம் வந்ததே தவிர, தாங்கள் அறிவாளியாக வரவேண்டும் என்பதையே மறந்து, அவர்கள் மேலும் மற்றவர்கள் அறிவைப் பாராட்டி மகிழ்வதில் மகிழ்ந்து வாழ்ந்தார்கள்.

உடற் கல்வி என்பதும் பயிற்சிகள் என்பதும் இராணுவ வீரர்களுக்கும், விளையாட்டைத் தொழிலாகக் கொண்ட வீரர்களுக்கும் மட்டுமே, அத்துடன் உடற் பயிற்சியை விரும்புகிற பொது மக்களுக்கும் என்பதாக உரிமைப்படுத்தப் பட்டது ஒதுக்கிவிடப்பட்டது. எல்லோருக்கும் உடற்கல்வி கட்டாயம் என்ற நிலைமாறி, யாருக்குத் தேவையோ அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளே வந்து முடிந்து போனதாக, வாழ்க்கை முறை வளைந்து போனது.

உடற் கல்வி என்பது தமாஷ-க்காகவும், கேளிக்கைக் காகவும் (Fun and Frolic) மேற் கொள்ளப்பட்டது. தங்கள் உடல் நலத்தைப் பாதுகாக்க, கிரேக்க நாட்டிலிருந்து மருத்துவர்களைக் கொண்டு வரும் பழக்கமும் பழக்கத்தில் வந்தது. அப்படியாக, தனிப்பட்ட நோயற்ற உடல் நலம், சமுதாய சுகாதாரம், சுற்றுப்புற தூய சூழ் நிலை என்பதாக வாழ்வு நிலையை மாற்றி அமைத்துக் கொண்டு, உடற் கல்வியை மறக்கத் தொடங்கினர்.