பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உலக நாடுகளில் உடற்கல்வி

93



சொல்வார்கள். இறுதியில் சாவு தான் போட்டியின் முடிவாக அமைந்திருக்கும்.

இது போன்ற போட்டிகளில், அந்த நாட்டு அடிமைகள், குற்றவாளிகள், சிறைபிடிக்கப்பட்டு வந்த அயல் நாட்டுக் கைதிகள் இவர்கள் தான் சண்டையிடுபவர்களாக ஆக்கப்பட்டிருந்தார்கள், அவர்களுக்கிடையே சண்டைகள் நடக்கும். பொதுவாக பயங்கர மிருகத்துடனும் போராட வேண்டும்.

90,000 பேர்கள் அமர்ந்திருந்து இப்படி கடுமையான காட்சியைக் காண அமைக்கப்பட்ட இந்த அரங்கத்தினுள்ளே, 6 ஏக்கர் பரப்பளவில் சண்டை போடும் இடம் அமைக்கப் பட்டிருந்ததாம்.

சில சமயங்களில் இந்த மத்திய இடம் தண்ணீரால் நிரப்பப்பட, அங்கே பல பயங்கர போட்டிகளும் நடை பெற்றதாம்.

சர்க்கஸ் கூடாரம்: தேரோட்டப் போட்டிகளை நடத்துவதற்காகத் தனியான அரங்கம் ஒன்றைக் கட்டி, அதற்கு சர்க்கஸ் என்று பெயரிட்டனர், அதன் நீளம் 2000 அடியும். அகலம் 600 அடியும் இருந்தது. அதில் ஒன்றரை லட்சம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க வசதியாகவும் அமைக்கப்பட்டிருந்ததாம்.

அரங்கத்தின் மத்தியில் ஒரு சிறு சுவர் எழுப்பப் பட்டு, அதைச் சுற்றித்தான் குதிரை பூட்டிய சாராட்டுகள் செலுத்தப்படும், வரும் வேகத்தில் திருப்ப முடியாமல் திருப்பவும் முடியாமல் அந்தச் சுவற்றில் தேர் மோதி தேரோட்டிகள் விபத்துக் குள்ளாகி மரண மடைவர். இதுதான் பார்வையாளர்களுக்குப் பிடித்த வேடிக்கையாக இருந்தது.