பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



நீச்சல் குளம், தண்ணீர் நிரப்பப்பட்ட குளங்களும், அரசு செலவில் கட்டப்பட்டு, பொதுமக்கள் வசதிக்காக விடப்பட்டிருந்தன. இதுவே நீந்திக்களிக்க மட்டுமல்லாமல், நீச்சல் போட்டி மற்றும் பந்து விளையாட்டுக்களை விளையாடவும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. நீச்சல் குளத்தைச் சுற்றி, உடைமாற்றிக் கொள்ளும் அறைகள். எண்ணெய் பூசிக் கொள்ள அறைகள், வென்னிர் குளியலுக்கான தனி அறைகள், குளிர்நீர் குளியலுக்கும் தனிஅறைகள் என்று ஒதுக்கப்பட்ட வசதிகளோடு அமைந்திருந்தன.

பார்வையாளர்களாக அமர்ந்திருந்து, பயங்கர சண்டைகளையும் இரத்தம் கொட்டும் துவந்த யுத்தங்களையும் பார்த்து மகிழ்கிற பக்குவம் ஒரு புறம் பொது மக்களிடையே வளபதமான பயிற்சிகள்ர்ந்து வந்த பொழுது, அதனோடு வஞ்சகம் நிறைந்த சூதாட்டங்களும் மறு புறம் வளர்ந்து கொண்டே வந்தன

பதமான பயிற்சிகள்

இதே சமயத்தில், உடலுக்குப் பயிற்சிகள் செய்ய வேண்டும் என்ற உணர்வும் உந்துதல்களாக மக்களிடையே வெளி வந்தன. கிரேக்க நாட்டுப் பயிற்சி முறைகளைக் கொஞ்சம் மாற்றி மென்மை படுத்திக் கொண்டு, மக்களில் சிலர் பயிற்சிகளைச் செய்தார்கள்.

அப்படிப்பட்டப் பயிற்சி முறைகள் 3 வகைகளாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டன. தசைகளுக்கு விசைச் சக்தி (Tone) தருகின்ற உடற் பயிற்சிகள், உடலை விரைவாக இயக்கவும் விரைவில் நல்ல உடலமைப்பையும் தருகின்ற பயிற்சிகள், மற்றும் கடுமையான பயிற்சி முறைகள் என்பது தான் அந்த மூன்றுமுறைகளாகும். இம் முறைகளை கேலன் (Galen) என்பவர், கிரேக்க நாட்டிலிருந்து வந்து தொகுத்துக் கொடுத்தார். அதற்கான பயிற்சிகளையும் கொடுத்தார்.