பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாட்டுகளில் உடற்கல்வி

95


மூன்று வகைப்பயிற்சிகள்

தோட்ட வேலைகளுக்காகத் தோண்டுதல் போன்ற காரியங்கள், ஓவியம் வரைதல், கனமான பொருட்களைச் சுமந்து செல்லுதல், கயிறு ஏறி மேலே செல்லல், எல்லாம் உடல் தரத்திற்கு உதவிய முதல் முறைகளாகும். ஓடுவது, குதிரை மீதேறி காலால் விரைவாக உதைத்து உந்தி ஒட்டுதல், பந்தைக் குத்தி உருட்டி விளையாடுவது, பந்தாட்டம், பந்துருட்டல், தரைமீது உருண்டு புரள்வது போன்றவை 2வது வகைப் பயிற்சிகளாகும்.

கடுமையான பயிற்சிகள் என்பது, இரும்பாலான கவசங்களை, போருக்காக அணியும் உடைகளை அணிந்து கொண்டு ஓடுவது, பயிற்சி செய்வது எல்லாம் 3ம் வகையாயின.

நாடி பார்த்து உடல் நலமறியும் முறை, கேலன் என்பவரால்தான் முதன் முதல் செயல் படுத்தப்பட்டது. பிற்கால ரோமானியர்கள் வாழ்க்கையில், நாடகங்கள், மேடைக் காட்சிகள் தான் முதல் நிலை பெற்று விளங்கின. விழாக்கள், விடுமுறைகள், கோலாகலங்கள், கவர்ச்சியான ஆடம்பரங்கள் எல்லாம் பொது மக்களை பேரானந்தத்தில் கொண்டு போய் நிறுத்தின.

இதற்காக அரசாங்கம் அதிகமாக செலவு செய்தது போலவே, வசதி படைத்த பணக்காரர்களும் இப்படிப்பட்ட காட்சிகளுக்காக நிறைய செலவு செய்து, சிந்தை மகிழ்ந்தனர், குளிர்ந்தனர். குளிர வைத்தனர்.

அதனால், உடற்கல்வி அதற்குரிய இடத்தை அடைய முடியாமல் தவித்தது. தனிமைப்படுத்தப்பட்டது.