பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உலக நாடகளில் உடற்கல்வி

97



மக்களாட்சி முறை மாறி,ஒரு தலைவர் கீழ் ஆட்சி முறை நடந்தபோதுதான் (Fascist Party),உடற்கல்வி சற்று புத்துயிர் பெற்றது.

ஒரு தலைவர் ஆட்சி முறையில், உடற் கல்விக்கென்று ஒரு தனித்துறையை அமைத்து, கல்வி அமைச்சகம் கெளரவப்படுத்தியது. அதை இத்தாலிய OPERA NAZIONALE BALILLA (ONB).

கல்வி முறை

ஒரு ஆட்சித் தலைவரின் கீழ் எல்லாரும் அடங்கி நடக்க வேண்டும் என்ற கொள்கையே கல்விக் கொள்கையாக இருந்தது. அந்தக் கொள்கையை கட்டாயமாக பின்பற்றக் கூடிய மனநிலையை, சூழ்நிலையை வளர்க்கும் வகையிலே திட்டங்கள் தீட்டப்பட்டன.

இத்தகைய உடற்கல்வி மூலம் புதிய கல்வி முறை, பள்ளிகளிலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது.

உடற் கல்வியானது பள்ளிக்கூட மாணவ மாணவியர்க்குக் கட்டாய பாடமாகக் கற்பிக்கப்பட்டது. நர்சரி பள்ளிகளில், மாண்டிசரி பள்ளிகளில் உடற் கல்வி இன்றி யமையாத ஒன்றாக இணைக்கப்பட்டு, சின்னஞ்சிறு குழந்தைகளுக்கும் பாடங்கள் ஆடல், பாடல், சைகை மூலம் கற்பிக்கப்பட்டது.

ஆரம்பப் பள்ளிகளில், வகுப்பு ஆசிரியர்களே உடற் கல்வியைக் கற்றுத் தந்தனர்.

அதற்கும் மேற்பட்ட மேல்நிலை வகுப்புகளிலும், உயர்தர ஆரம்பப் பள்ளிகளிலும், உடற்கல்விக் கென்றே பயின்ற உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்