பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

உலக வரலாற்றில்


மோகவலையில் வீழ்த்தி மயக்கிய உலகப் பேரழகி கிளியோபாட்ரா கூட ‘எனது உயிர் ஈஜிப்டு’ என்று சாகும் வரை போற்றிப் புகழ்ந்த நாடு எகிப்து நாடு!

அவ்வளவு பெயரும் புகழும் பெற்ற ஒரு நாடு, உலகத்தில் சீரோடும் சிறப்போடும் போற்றப்பட்ட ஒரு நாடு, வளமிக்க ஒரு நாடாக உலக வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு, கடந்த நூற்றாண்டில் சுரண்டல்காரர்களின் வேட்டைக் காடாகி தனது பொலிவையும், வளத்தையும் பறிகொடுத்துக் கொண்டிருந்தது.

எகிப்து நாட்டுமக்கள் உணவுக்கும், உடைக்கும் குந்தியழுது கொண்டிருக்கும் நிலையில், வந்தவர்கள் எல்லாம் அந்நாட்டில் குடியேறி, வாரி வாரிச் சுருட்டிச் சென்று கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள்.

இவ்வாறு கொள்ளையடித்தவர்களுள் எகிப்தின் வந்தேறிகளான பிரிட்டிஷாரும் அடங்குவர்.

பிரிட்டிஷ் என்ற ஆங்கில ஏகாதிபத்தியக்காரர்கள், எகிப்து நாட்டுக்குள் அலையலையாகச் சென்று அகப்பட்டதையெல்லாம் சுருட்டிய கொள்ளைக்காரர்களாக இருந்தார்கள்.

போரிட்டுக் கொள்ளையடித்தாலும் பரவாயில்லை; வியாபாரிகளாகச் சென்று கொஞ்சம் கொஞ்சமாக இடம்பிடித்து, சொந்த நாட்டுக்காரனைச் சொக்கட்டான் சூதுக்காய்களாக நகர்த்தி நகர்த்தி, ஆசைகாட்டி அவர்களை