பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

101


அடிமைப்படுத்தி, பிறகு தனது விருப்பம்போல கிடைப்பதை எல்லாம் சுருட்டிக் கொண்டு, இறுதியிலே அந்த நாட்டைப் பிடித்துக் கொண்டு, தங்களது ஆதிக்கக் கொடியை அங்கே வானளாவப் பறக்கவிட்டுக் கொண்டு, சொந்த நாட்டாரைச் சோற்றுத் துருத்திகளாக்கி விடுவது பிரிட்டிஷாரின் கைவந்த, நாடு பிடியாசைக் கலைகளுள் ஒன்றாகும்.

எகிப்தில் இவ்வாறு கொள்ளையடித்த பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தின் கீழ் சூயஸ்கால்வாய் அடிமையானது. இந்த ஒரு கால்வாயை வைத்தே உலகத்தை ஆட்டிப் படைத்தவர்கள் ஆங்கிலேயர்கள்.

எகிப்து நாட்டை கடந்த நூற்றாண்டின் இடையில் ஆண்ட மன்னன் பரூக். அவன் ஆங்கிலேயர்களின் எடுபிடி மன்னனாக இருந்தான். எப்போதும், எதற்கும் தலையாட்டிப் பொம்மையாக இருந்த பரூக் சுகபோகியாகவும், பெண்பித்தனாகவும் வாழ்ந்து வந்தான்.

அடிமை மன்னனான அவன், தனது எகிப்து நாட்டை பிரிட்டிஷாரிடம் அடகுவைத்து விட்டு, அவர்கள் கொடுத்த பிச்சைக்காசைக் கொண்டு, பெண் போக உல்லாச, கேளிக்கை வாழ்க்கை நடத்தி வந்தான்.

நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்களான எகிப்து நாட்டு மக்கள் ஒரு வாய் உணவுக்கு நாயாய் பேயாய் அலைந்து கொண்டிருக்கும் போது, மன்னன் பரூக் மட்டும் மதுவும் மங்கையுமாக பெண்களிடம் சரசமாடிக் கொண்டு