பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

111



நீடு துயிலில் இருந்த ஆப்கானிஸ்தான் நாட்டை அடிமைத் தூக்கத்தில் இருந்து தட்டிஎழுப்பிய அமானுல்லா 1919ஆம் ஆண்டிலிருந்து 1929வரை ஆப்கானிய விடுதலைப் போராட்டத்தின் மூலமாக அந்தப் பத்தாண்டுக் காலத்தில் முடியரசை உருவாக்கி நிலை நிறுத்தியவர் அமானுல்லா.

அந்த நாடு விடுதலை பெற்றதற்குப் பின்பு அவர் செய்த முதல் சீர்திருத்தம் நிலவரியையும், உயிரின வரியையும் பணமாக வசூலிக்கும் முறையாகும்.

அதற்கு முன்பு அந்த நாட்டின் நில வரிப் பொருள்கள் மூலமாக வசூலித்து வரப்பட்டது. விவசாயிகள் தங்களது வரிகளைப் பணத்திற்குப் பதிலாக தானியங்களாலும், பிற பொருள்களாலும், கட்டிவந்தார்கள்.

பணத்தால் வசூலிக்கும் பொருளாதாரச் சிக்கனமுறை நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது. சொந்த நிலத்தின் சொத்துக்களுக்கு உரிமை வழங்குதல், அதற்குச் சரிசமமான முக்கிய ஒரு சீர்திருத்தமாகக் காணப்பட்டது.

கான் மரபினர்கள் அனுபவித்துவந்த உதவிப்பணம், தீர்வை விலக்குச்சகாயம் அரசினர்க்காக வரிவசூல் செய்யும் உரிமை முதலியன ரத்து செய்யப்பட்டன.

பொருள் உருவத்தில் மக்களிடம் வரிவசூலிக்கும் முறை தள்ளுபடி செய்யப்பட்டது. தவிர, அந்த வரி