பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

113



வானொலி அமைப்புத் திட்டத்தை 1925-ஆம்ஆண்டில் தொடங்கினார். 1929-ஆம் ஆண்டில் நாட்டின் எல்லா முக்கிய நகரங்களுடனும் காபூல் நகரை கம்பி இல்லாதத் தந்தியின் மூலமாக இணைத்தார்.

ஆப்கான் நாட்டு விடுதலைக்கு முன்பு கல்வித்துறைக்கென்று நாட்டில் உண்டாகி இருந்த நிறுவனங்கள் 1904-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அபிபியா உயர்நிலைப் பள்ளியும், ஓர் இராணுவப் பயிற்சிப் பள்ளியும், ஓர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும், மற்றும் ஒரு சில ஆரம்பப் பள்ளிகள் மட்டுமே ஆகும்.

அமானுல்லா பதவிக்கு வந்தபிறகு, மூன்று உயர்நிலைப் பள்ளிகளை உருவாக்கினார். பெண்கள் பள்ளியை அவர் முதன் முதலாக நிறுவினார். மேற்படிப்புக்காக ஏராளமான மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வர ஏற்பாடுகளைச் செய்தார்.

ஆப்கான் நாட்டின் முன்னேற்றத்திற்காக, இந்தியாவிலிருந்தும், ஐரோப்பா நாடுகளில் இருந்தும் கல்வி நிபுணர்களை அந்த நாட்டிற்கு அழைத்து வந்து கல்வித்துறையை வளர்த்தார். இதனால் வெளிநாட்டுக் கல்விக் கலை நுட்பங்கள் வளர்ந்தன. அதன் உதவியால் மின்சாரம், தீப்பெட்டிகள், சிமெண்ட் பயன்படுத்தும் கட்டடமுறைகள், துணிகளுக்குச் சாயம் போடும் தொழில்கள் சிறு சிறு தொழில்களாக நாட்டில் தோன்றிட வளர்ச்சி பெற்றிட வழிவகுத்தார் அமானுல்லா. பஞ்சு நூற்பாலைகள்