பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

உலக வரலாற்றில்



போஸின் தீவிரமான இந்தப் பேச்சு காங்கிரஸ் பேரவையின் உள்ளும் புறமும் பலத்த எதிர்ப்பை கிளப்பியது. தீவிரமாக இருந்த இளைஞர்கள் எல்லாம் போஸ் பிரகடனத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரசுக்கு போதிய பலம் இல்லாத நிலையில் இந்த பயங்கரப்புரட்சி நடவடிக்கையில் ஈடுபட்டால் எங்கே விடுதலைப் போராட்டத்திற்குத் தோல்வி வந்து விடுமோ என்று காங்கிரஸ் அஞ்சியது. ஆனால் சுபாஷ் சந்திரபோஸ் தனது முடிவில் உறுதியாக நின்றார். தனது போக்கை மாற்றிக்கொள்ள மறுத்து விட்டார்.

இந்திய தேசிய காங்கிரஸ் பேரவையில் தனது கருத்துக்களை ஏற்றுக்கொள்வோர் பெரும்பான்மையாக இல்லை என்பதைப் புரிந்துகொண்ட சுபாஷ் சந்திரபோஸ் பேரவையின் தலைமைப் பெறுப்பிலிருந்து விலகிவிட்டார். தனது இலட்சியம் எதுவோ அதே பாதைக்கு வழிவகுத்து நடமாடத் துணிந்துவிட்டார்.

அப்போது, இராண்டாவது உலகப்போர் துவங்கியது. உலகமெங்கும் ஒரே பரப்பரப்பு சூழ்நிலை.இந்தநேரத்தில், சுபாஷ் சந்திர போஸின் அதிதீவிர நடவடிக்கைகளைக் கண்டு பிரிட்டிஷ் பேரரசு பீதியடைந்தது. போர்க்கால நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு சுபாஷ் சந்திரபோஸ் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடுமே என்று கலங்கி அவரைச்சிறையில் அடைத்தது.

என்னை சிறையில் அடைத்தது ஏன்? காரணம் என்ன உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் விசாரணையின்றி