பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

11


என்னை சிறையில் அடைத்து வைத்ததை எதிர்த்து உண்ணாவிரதம் மேற்கொள்வேன் என்று சூளுரைத்து உண்ணாவிரதம் இருந்தார். ஆங்கிலப் பேரரசு பலமுறை கேட்டுக்கொண்ட பிறகும் கூட அவர் உண்ணாநோன்பை நிறுத்தமாட்டேன் என்று அறிவித்தார்.

பிரிட்டிஷ் அரசு உடனடியாக அவரை விடுதலை செய்தது. ஆனால் அவருடைய வீட்டைச் சுற்றிலும் போலீஸ்காரர்களை நிறுத்தி அவருடைய நடமாட்டங்களை கூர்ந்து கவனித்தது. அரசு அனுமதியில்லாமல் போஸ் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று தடை விதித்தது.

ஆன்மிக ஆராய்ச்சியில் ஈடுபட இருப்பதாக போஸ் கூறினார்.தமது அறையைச்சுற்றிலும் கருப்புத்திரை ஒன்றை கட்டச்செய்தார். தாம் தனிமையை விரும்புவதால் உணவுப் பொருள்களைக் கூட யாரும் தன்னிடம் நேரடியாகக் கொண்டு வராமல் திரைவழியாக உள்ளே வைத்துவிட்டால் போதும் என்று ஏற்பாடு செய்தார். ஒரே ஒரு முஸ்லீம் மட்டும் மருத்துவர் என்ற முறையில் தினமும் அவரை சந்தித்து வந்தார்.

உலகப் போர் தீவிரம் அடைந்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்திய நாட்டின் விடுதலைக் கிளர்ச்சியை மிகக் கடுமையாக நசுக்க விரும்பும் என்று சுபாஷ் உணர்ந்தார். இந்த நிலையில் தேசத் தொண்டர்கள் மன நிம்மதியோடு செயற்பட முடியாது என்று அவர் எண்ணினார். எனவே,