பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

உலக வரலாற்றில்


அடையாமல் இந்திய நாட்டின் மாபெரும் புரட்சி வீரனுக்கு தஞ்சம் அளிப்பதில் பெருமைப்பட்டார்.

உத்தம்சந்த் வீட்டில் தங்கி இருந்தபோது சுபாஷ் சந்திரபோஸ் இத்தாலி நாட்டுத் தூதருடன் தொடர்பு கொண்டு அவருடைய உதவியினால் தந்திரமாக விமானத்தில் ரோம் நகர்சென்றடைந்தார்.

அங்கிருந்து ஜெர்மனி சென்றார். உலகத்தைக் கலக்கிக் கொண்டிருந்த சர்வாதிகாரியான இட்லரைச் சந்தித்தார். அவரிடம் தமது திட்டங்களைக் கூறி தனது நாட்டு விடுதலைக்கு தாம் மேற்கொள்ளும் முயற்சியில் உதவிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சுபாஷ் சந்திரபோஸின் நாட்டுப்பற்றையும், அஞ்சா நெஞ்சையும், அற்புத ராஜ தந்திரங்களையும் அவரிடம் கேட்டு இட்லர் பிரமிப்பும் மதிப்பும் கொண்டார். அவருடைய செயல்களுக்கு தாம் முழு ஆதரவும், உதவியும் அளிப்பதாக வாக்குறுதி அளித்தார்.

உலகப்போர் அப்போது மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவியிருந்தது. பிரிட்டிஷாருக்காக போரிட்ட பல இந்திய வீரர்கள் அப்போது ஜெர்மானியர் வசம் போர்க்கைதிகளாக இருந்தனர். அவர்களையெல்லாம் எந்த நிபந்தனையுமின்றி இட்லர் விடுதலை செய்தார்.

விடுதலை செய்யப்பட்ட போர் வீரர்களுடன் போஸ் தொடர்பு கொண்டார். தம்முடைய திட்டங்களை