பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விடுதலை வீரர்கள்

15


அவர்களிடம் கூறினார். பிரிட்டிஷாரிடம் அடிமைக் கூலிகளாக இருந்து அவதிப்பட்டதைவிட சொந்தநாட்டை மீட்கும் சுதந்திரப் படை வீரர்களாக நீங்கள் விளங்க வேண்டும். அந்த தேசபக்திச் சேவையிலே நீங்கள் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பாரத வீரர்கள் போஸ் கூறியதைக் கேட்டு மகிழ்ச்சி பொங்கினார். சுபாஷின் திட்டத்தை ஏற்றனர். அவர் தலைமையில் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராட தயாராகினர்.

சுபாஷ் சந்திரபோஸ் ஒரு இராணுவத் தளபதிக்கான எல்லாப் பயிற்சிகளையும் நிறைவாகப் பெற்று, சுதந்திரப் படையின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடுமையாக நடந்து கொண்டிருந்த உலகப் போரில் ஜப்பானும் குதித்தது. மலேயா, பர்மா ஆகிய நாடுகளிலிருந்த பிரிட்டிஷ் அரசு படைபலத்தை ஆறே மாதத்தில் ஜப்பான் விரட்டியடித்தது. அந்தச் சமயத்தில் சுபாஷ் சந்திரபோஸிற்கு வியக்கத்தக்க பக்கத்துணை ஒன்று கிடைத்தது.

ராஸ்ட் பிகாரி போஸ் என்ற புரட்சி வீரர் ஆங்கிலேயரால் நாடு கடத்தப்பட்ட இந்தியர். அவர் ஜப்பானில் குடியேறியிருந்தார் புரட்சி வீரர் சுபாசுடன் தொடர்பு கொண்டார். சுபாஷை ஜெர்மனியிலிருந்து அழைத்துவந்து, இந்தியர்கள் இலட்சக் கணக்கில் வாழும் கிழக்காசிய