பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

உலகவரலாற்றில்


நாடுகளில், இந்திய சுதந்திர இயக்கத்தை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார். ஜப்பானும் ஜெர்மனியும் அப்போது நட்பு நாடுகளாயின. அதனால் ராஸ்ட் பீகாரி போஸின் திட்டங்கள் வெற்றியடையத் துவங்கின. ஜப்பானியப் பிரதமரான டோஜோவை ராஸ்ட் பீகாரி போஸ் அப்போது சந்தித்து சுபாஷ் சந்திரபோஸின் திட்டத்துக்கு ஜப்பான் உதவியையும் ஆதரவையும் பெற்றார்.

சுபாஷ் சந்திரபோஸ் தனது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக, பாரத மக்களுக்கும், காந்தியடிகளுக்கும் வானொலி மூலமாக தனது நிலையை விளக்கினார்.

இந்திய விடுதலை அரசின் தலைமையகம் ஒன்றை சுபாஷ் சந்திரபோஸ் தற்காலிகமாக சிங்கப்பூரில் அமைத்தார். அதன் தலைவராகத் தம்மைப் பிரகடனம் செய்து கொண்டார். அவருக்கு ஆலோசனை கூற ஓர் அமைச்சரவையையும் உருவாக்கிக்கொண்டார்.

பிரிட்டிஷ் அரசு மலேயாவிலிருந்து தோல்வி கண்டு பின்வாங்கிச் சென்றபோது இந்தியர்கள் பலர் அடங்கிய இராணுவப் பிரிவுகள் ஜப்பானியர்களிடம் சரணடைந்து இருந்தனர். போஸின் தலைமையை ஏற்று இந்தியாவை மீட்கும் படையணியில் அந்த இந்தியர்கள் படைகள் இரண்டற கலந்துவிட்டன. இப்போது, இராணுவத்தின் பிரதம தளபதி என்ற முழுபெறுப்பை ஏற்றுக் கொண்டு போஸ் விடுதலை முழக்கமிட்டார்.