பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



18

உலக வரலாற்றில்


ஒன்றும் நிறுவப்பட்டது. விடுதலை சர்க்காரின் தலைமைச் செயலகம் சிங்கப்பூரிலிருந்து இரங்கோனுக்கு மாற்றப்பட்டது.

“டில்லி சலோ!” என்ற வானதிர்ந்த முழக்கத்தோடு சிங்கப்பூரிலிருந்து விடுதலைப் படை தனது இலட்சியத்தை நோக்கி புறப்பட்டது. தேசிய இராணுவம் தாய்லாந்தை சுற்றிக் கொண்டு பர்மா வந்து சேர்ந்தது. அந்தப் படைகளுக்கு ஷாநவாஸ், சேகல், தில்லான் ஆகிய மூவரையும் தளபதிகளாகத் தேர்ந்தெடுத்து நியமித்தார் நேதாஜி.

இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் நேதாஜியின் சுதந்திரப் படை தனது வெற்றிகரமான முதல் தாக்குதலை அறக்கான் யோமா, பெகு யோமா என்ற மலைச் சாரல் வழியாகத் தொடர்ந்தது.கடுமையான மோதலுக்குப் பின்னர் பிரிட்டிஷ் இராணுவம் தோல்வி கண்டு பின்வாங்கி ஓடியது.

நடைபெற்றுவந்த உலகப்போரில் எதிர்பாராதவிதமான சில திருப்பங்கள் தோன்றின.இரஷ்யா, ஜப்பான்மீது போர் தொடுத்தது. அணு குண்டுகளை வீசி ஜப்பானிய மக்களை அமெரிக்கா படுகொலை புரிந்தது. இருமுனைத் தாக்குதலைத் தாங்கமாட்டாமல் ஜப்பான் சரணடைந்தது.

நேதாஜி பெரும் மனக்குழப்பம் அடைந்தார். நீண்ட யோசனைகளுக்குப் பிறகு தம்முடைய உதவியாளர்களுடன் நேதாஜி செய்கோன் வந்து சேர்ந்தார். அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு பயணம் செய்த பொழுது விமானம்