பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விடுதலை வீரர்கள்

19


விபத்துக்குள்ளானது. வங்கம் தந்த விடுதலைச் சிங்கம் நேதாஜி வீரமரணம் அடைந்தார்.

நேதாஜி நினைத்தது நடக்கவில்லை. ஆனால் அவருடைய இலட்சியம் வெற்றி பெற்றுவிட்டது. விடுதலை பெற்ற இந்திய நாடு வீரமரணம் அடைந்த நோதாஜியின் தியாகத்தை, நாட்டுப் பற்றை, தேசப் பக்தியை தன்னலம் பாரா மக்கள் சேவையை என்றும் மறக்காது. ஜெய்ஹிந்த்!




விஞ்ஞான சோசலிச வித்தகர்!

உலக நாடுகளெல்லாம் விழித்து எழுந்து தங்களது எதிர்கால வாழ்க்கைக் கோட்டைக்கு சோசலிச அடிப்படையினையே அஸ்திவாரமாக்கிக் கொண்டு இயங்கி வருகின்றன. நம்முடைய இந்திய நாடும் அரசும் சோசலிச சமுதாய அமைப்பே நமது இறுதி இலட்சியம் என திட்டவட்டமாக அறிவித்து அதனை அடைவதற்கான செயல்முறைகளில் கவனம் செலுத்தி வருகிறதைப் பார்க்கிறோம்.

இந்திய அரசு விரும்பும் ஜனநாயக சோசலிசத்திற்கும், சோவியத் யூனியனின் நடைமுறைகளில் இருக்கும் சோசலிச முறைகளுக்கும் இடையே செயல்முறை வேறுபாடுகள் உண்டு. ஆனால் அஸ்திவார இலட்சியம் ஒன்றே ஒன்று தான்.