பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



22

உலக வரலாற்றில்



அந்தப் பத்திரிக்கையின் மூலமாகப் புரட்சிக் கருத்துகளையும், உணர்ச்சிகளையும், எழுச்சிகளையும் மக்களிடையே அதிகமாகப் பரப்பினார். அதனை அந்நாட்டு அரசு கண்காணித்து வந்தது. ஒரு கட்டுரையை ஒருமுறை அல்லது இருமுறை படித்துப் பார்த்துப் பிறகு வெளியிட வேண்டுமென அரசுகட்டளையிட்டது.இவ்வாறு செய்தும் கூட செய்தித்தாளின் போக்கு மாறவில்லை. அரசாங்கம் பத்திரிக்கை வெளிவராதபடி தடுத்து விட்டது.

நாட்டுரிமை, பொருளாதாரம் முதலிய துறைகளில் அவர் பெற்றிருக்கும் அறிவு போதாது என்று மேலும் பல நூல்களை ஆர்வத்தோடு கற்றார். அவர் எழுதிய கட்டுரைகள், நூல் முதலியவற்றின் வாயிலாக இவர் கொள்கை நாடெங்கும் பரவி மக்களிடையே விழிப்பையும், பரபரப்பையும் உருவாக்கின. மதம், கலை, விஞ்ஞானம் இவற்றை மக்கள் சிந்திக்கும் முன், உண்பது, உடுப்பது போன்ற உலக வாழ்விற்குத் தேவையான செயல்களில் அக்கறை செலுத்த வேண்டும் என்று மார்க்ஸ் கூறினார். இவரது கொள்கை உலகத்திற்கு புதியது அல்ல, இவர் அதனை மக்கள் வாழ்க்கையோடு இணைத்து பழக்கத்திற்கு கொண்டு வர முயற்சித்தார்.

நாகரீக சமுதாயத்திலே அரசியல், சட்டத்திட்டம் முதலிய அனைத்தும் பொருளாதார வளர்ச்சியின் அடைப்படையில் இருக்கவேண்டும் என்று எண்ணினார்.இந்தக் கருத்துகளை யெல்லாம் அவர் ‘மூலதனம்’ என்ற நூலிலே விளக்கினார். வான் வெஸ்ட்பேலன் என்பவளை இவர் 1843ஆம்