பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விடுதலை வீரர்கள்

23


ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். அவள் செல்வக் குடும்பத்தில் பிறந்தவள். அவள் தந்தையும், மார்க்ஸ் தந்தையும் இணைபிரியா நண்பர்கள், அவள் சிறுமியாக இருந்தபோது அவளைத் தந்தையார் அழைத்துக்கொண்டு, மார்க்ஸின் வீட்டிற்கு வருவார். அப்போது மார்க்சும் வெஸ்ட் பேலனும் ஒருவருக்கொருவர் அன்பு கொண்டனர். தன்னுடைய படிப்பு முடிந்தபின் அவளை மணந்து கொள்வதாக மார்க்ஸ் கூறியிருந்தார். பத்திரிக்கை ஆசிரியர் பணியை விட்டுவிட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மார்க்ஸ், அவளை மணந்தார். கூர்மையான அறிவும், தெளிவான சிந்தனையும் உடைய, அந்த பெண் வாழ்நாள் முழுவதும் கணவனுக்கு உற்றத் துணையாக வாழ்ந்து வந்தாள்.

பண்டங்களின் உற்பத்தி முறையையும், அதனால் உண்டாக்கப்படும் முதலாளி இனத்தையும், அவ்வினத்தை இயக்கும் பொதுவிதியையும், ‘மூலதனம்’ என்ற நூலில் மார்க்ஸ் ஆராய்கிறார். முதலாளிகளின் மூலதனத்தை இருவகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று நிலையான மூலதனம், மற்றொன்று மாறும் மூலதனம். இயந்திரக் கருவிகள் முதலியவற்றிற்காக செல்வத்தை முடக்குவது நிலையான மூலதனம். இந்த மூலதனத்தால் பண்டங்களின் மதிப்பு பெரிதும் உயர்வதில்லை. மூலப்பொருள்களை திருத்தியப் பண்டமாக அமைத்து தரும் உழைப்பாற்றலே மாறும் மூலதனம்என்பது.அதுவே பண்டங்களுக்கு மிகுந்த மதிப்பு உண்டுபன்னுகிறது. பண்டங்களின் மதிப்பு உயரும்-