பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

உலக வரலாற்றில்


போது முதலாளிக்கு ஆதாயம் அளிக்கிறது. ஆதலால் உழைக்கும் ஆற்றலின் அடிப்படையிலே இலாபத்தைக் கணக்கிடவேண்டும் என்று மார்க்ஸ் கூறினார்.

பண்டங்களின் இயல்புகளை மார்க்ஸ் பல கோணங்களிலிருந்து ஆராயும் போதும் பல அரிய உண்மைகளை விளக்குகிறார். பண்டங்களின் உற்பத்தியையும், பண்ட மாற்றத்தையும் பற்றிப் பின்னர் விரிவாகக் கூறுகிறார். பண்டமாற்றம் செய்யும்போது கிடைக்கும் ஆதாயத்தில் பெரும் பங்கு உழைக்கும் ஆற்றலுக்கே சொந்தம் ஆக வேண்டும். தொழிலாளர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை முதலாளிகள் கொடுப்பதில்லை. அதனால் தொழிலாளர்கள் முன்னேற்றமில்லாமல், எப்போதும் வறியவர்களாய் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலை நீடித்தால் தொழிலாளர்வர்க்கம் அழிந்து போகும். இதைத் தவிர்க்க புரட்சி ஒன்றே வழி என்று அவருக்குத் தோன்றியது.

தொழிலாளர்கள் ஒற்றுமையோடு உரிமைக் கிளர்ச்சி செய்ய வேண்டும். தொழிச்சாலைகளை தேசியமயமாக்க வேண்டும். தனிமனிதனுக்கு உரிமை, என்ற நிலை மாறி பொதுவுடைமை ஆகவேண்டும். முதலாளிக்கு ஈட்டுப் பணம் கொடுக்கலாகாது என்று மார்க்ஸ் கூறுகிறார்.

முதலாளியினம் இருக்கும் வரை, தொழிலாளிக்கு முன்னேற்றமே இல்லை என்பது அவரது கருத்து. புரட்சியின் மூலம் தொழிற்சாலைகளைப் பொதுவுடைமை