பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விடுதலை வீரர்கள்

27


ஏற்படும் நன்மையையும் எண்ணி தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்தனர். மார்க்ஸ் தொழிலாளர்கள் முன்னனியில் நின்று புரட்சி செய்தார்.

ஜெர்மனில் ஜனநாயக ஆட்சி ஏற்பட்டது. மார்க்ஸ் தமது வாழ்நாள்களிலே அதைக் காணும் வாய்ப்பைப் பெற்றார். இந்த இயக்கங்களில் எல்லாம் மார்க்சுக்கு நல்ல நண்பராய் இருந்தவர் பிரட்ரிக் எங்கெல்ஸ் என்பவர் ஆவர். இருவரும் இணைபிரியா நண்பர்கள். ஒரே விதமான சிந்தனையாளர்கள், உண்மையான நட்பு இவர்களிடையே இருந்தது. எங்கல்ஸ்-காரல் மார்க்ஸின் மாணவர். நூல் வெளியீட்டில், துணையாசிரியர். இவர்களுடைய கொள்கைகளைப் பரப்புவதிலும் எண்ணங்களை எடுத்துச்சொல்லுவதிலும், இவருக்கு வருவாய் தேடுவதிலும் பெரும் உதவியாக இருந்து வந்தார்.

மார்க்ஸ் குடும்பம் லண்டனில் வறுமையுடன் போராடியது. அன்பான மனைவி, உண்மையுள்ள ஒரு பணிப்பெண், குழந்தைகள், இவர்கள் அடங்கியக் குடும்பம். பணமில்லாமல், வருவாயில்லாமல் தவித்தது. வறுமையினால் நோயும் அவர்களைப் பற்றியது. ஆகவே குழந்தைகள் இரண்டு இறந்தன. நோயினால் மார்க்ஸ் வேதனைப்பட்டார். செல்வத்திலே பிறந்த இவருடைய மனைவி, வறுமையில் நலிந்து கிடந்தாள். எங்கல்ஸின் பெருந்தன்மை இவர்களுக்கு பொருளாக உருவெடுத்தது.