பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விடுதலை வீரர்கள்

29


நாடு 19-ஆம் நூற்றாண்டு வரையிலும் பொருளாதாரத் துறையில் சீர்குலைந்திருந்தது. அந்தச் சூழ்நிலையில் அவர் ஜெர்மனியிலே வாழ்ந்திருந்தால், முதலாளித்துவத்தின் அநீதிகளை, கொடுமைகளை அறிந்திருக்கமாட்டார். இங்கிலாந்தில் அவர் இருந்தபோது பிரிட்டிஷ் நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேறியிருந்தது. அப்போது அங்கே தங்கியிருந்த மார்க்ஸ் பொருளாதாரத் துறையில் சிறந்த ஞானத்தை, அறிவு நுட்பத்தைப் பெற்றார்.

காரல் மார்க்ஸ் கம்யூனிசக் கொள்கையை ருசியா, சீனா போன்ற நாடுகளும் கூட முற்றிலும் ஏற்றுக்கொள்ளவில்லை.அவரது கொள்கையை பொருளாதார நிபுணர்கள், தத்துவ வித்தகர்கள், சிந்தனையாளர்கள், சமுதாயச் சீர்திருத்தச் சிற்பிகள் நாட்டின் அன்றைய முன்னேற்றத்தை விரும்பியவர்கள் அனைவரும் கண்டித்தார்கள். அவருடைய கொள்கையைப் போற்றியவர்களை விடத், துற்றியவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள். ஏனென்றால், அவருடைய கொள்கை அடிப்படையிலேயே தவறு என்றும் அவருடைய எண்ணங்கள் எதிர்காலத்தில் நிறைவேறாதது மட்டும் அல்ல, எதிர் பார்த்ததற்கு நேர் எதிராகவும் முடியக்கூடும் என்றும் பேசினார்கள்.

முதலாளிகளின் ஆதிக்கத்தில் தொழிலாளர்கள் வறுமையில் வாடுவார்களேயன்றி, மகிழ்ச்சியுடன் இருக்க மாட்டார்கள் என்றும் மார்க்ஸ் கூறினார். ஆனால்,