பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலக வரலாற்றில்

30




அமெரிக்கா ஐக்கிய நாடுகளிலும், தொழிலாளர்கள் இன்பமாக வாழ்ந்து வருகிறார்கள். எவ்வளவு சிறந்த கொள்கையாக இருந்தாலும்.அதனை அடைகின்ற நெறியும் சிறந்ததாக இருக்கவேண்டும். மார்க்ஸ் கூறும் வழி தொழிலாளர்களின் வாழ்வுக்குக் கொடுமையாகவும், கொலையும், குருதியும் நிறைந்ததாகவும் இருக்கின்றது. இந்தக் காரணங்களைக் காட்டி பெட்ரண்ட் ரஸ்சல், பெர்னாட்சா போன்ற பேரறிஞர்கள் வன்மையாக கண்டனம் செய்தார்கள். பெர்னாட்சா கூறும் போது தொழிற்சாலைகளைத் தேசிய மயமாக்கினால், முதலாளிகளுக்கு ஈடு வழங்கப்படவேண்டும் என்றும், அப்போதுதான் நாட்டின் வளமும், நலமும், அன்பும், அமைதியும் நிலையாக நிற்கும் என்றார்.

ஒரு நாட்டில் உள்ள மக்கள், கல்வியிலும், பகுத்தறிவிலும் முன்னேற்றம் அடைந்து இருந்தால், அந்த மக்கள் தங்களது உரிமைகளுக்கு அழிவு தேடும் எந்தக் கொள்கையையும் ஏற்றுக் கொள்ளவோ, வரவேற்கவோ மாட்டார்கள். அவர்களுக்கு உணவும், உடையும் மட்டும் தான் பெரியவை அல்ல. நாட்டின் உரிமையும், பேச்சுரிமையும், வாழ்க்கையுரிமையும் முக்கியமானவை என்றே கருதுவார்கள். மார்க்ஸின் கொள்கைகளை பலர் குறை கூறிக் கண்டனம் செய்திருந்தாலும், இவரால் மனித இனத்திற்கு உழைக்கும் மக்களுக்கு விளைந்த நன்மைகள் ஏராளம் ஆகும். ஏனென்றால் தொழிலாளர்கள் மனித இனத்தின் உயிர்நாடிகள் என்றார். அவர்களுடைய