பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

31


உரிமைகள், தடையின்றி வழங்கப்படவேண்டும் என்றும், வளர்க்கப்பட வேண்டும் என்றும், அந்த நோக்கத்தின் அடிப்படையில் பண்பாட்டையும், நாகரீகத்தையும் புதிய முறையில் உருவாக்கித்தந்து மார்க்ஸ் பெருமை பெற்றார்.

பழமையின் பிடிப்பிலே இயங்கிக் கொண்டிருந்த சமுதாயத்திற்கு, மார்க்ஸ் கொள்கை, ஒரு மின் தாக்குதல் போல் அதிர்ச்சியை அளித்தது. அதனால் இவரது புரட்சிக் கொள்கை ஏழை மக்களிடையே நன்கு பரவியது. பொருளாதார நிலையில் பெருத்த வேற்றுமை இருக்கக் கூடாது என்ற உண்மையை, மக்களும், ஆட்சியாளர்களும் ஒப்புக்கொண்டார்கள். அதற்குப் பிறகு, எந்த வழியில் தொழிலாளர்களுக்கு உதவிகளைச் செய்யலாம், எப்படி செய்யலாம் என்று அரசினர்கள் சிந்திக்கலானார்கள். அதன் பயனாக தொழிலாளர்கள் வேலை நேரம், ஊதியத்தின் விடுமுறை, தங்குமிடம், மருத்துவ ஒய்வு, மருத்துவ வசதி, பதவி நீடிப்பு, வயோதிகர்க்கான பாதுகாப்பு, ஓய்வூதிய பலன்கள் கிடைத்தன.

காரல் மார்க்ஸ் இவ்வாறு ஏழைத் தொழிலாளர்கள் வறுமையைப் போக்க, அவர்களது துன்பத்தை நீக்க, ஓய்வு ஒழிச்சலின்றி நாடு நாடாக அலைந்து அனுபவிக்க முடியாத துன்பங்களையும், வேதனைகளையும் ஏற்று, அனுபவித்து அந்தந்த நாட்டு ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளுக்கெல்லாம் பலியாகி இறுதியிலே தனது கொள்கைக்கு சிறந்த வெற்றியைத் தேடித் தரும் தத்துவச்-