பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

உலக வரலாற்றில்


கொடுமையும் செய்தது. அவரை ஒரு துரோகி என்று இட்லரின் படை நாஜி வெறியர்கள் பழி சுமத்தினார்கள். ஆனால், அந்த நாட்டு மக்கள் அவர் ஒரு வீரர், தேசத் தியாகி, விடுதலை வீரர் என்று எதிர்குரல் எழுப்பினார்கள். 1943ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பெர்லின் நகரில் அந்த நாஜி வெறியர்கள் அம்மாவீரனைத் தூக்கிலிட்டுக் கொன்றார்கள்.

தூக்கு மேடையிலே நின்ற, அந்த விடுதலைச் சிங்கம் ஜீலியஸ் பியூலிக், அலட்சியமாக நகைத்தது. மனிதகுலத்தின் கொடிய எதிரிகளை நாஜி வெறியர்களை நோக்கி கேலியாகச் சிரித்தார்.

இன்பத்திற்காக வாழ்ந்தேன், இன்பவாழ்விற்காக போர்க்களம் புகுந்தேன், இன்பம் தரும் சுதந்திரத்திற்காகவே இப்போது செத்துக்கொண்டிருக்கிறேன். ஆகவே துன்பம் என் பெயரோடு என்றுமே இணைக்கப்படக் கூடாது. அது முறையல்ல. நான் சாகும் போதும் இன்பத்துடன், இனிய சிந்தனையுடன் அஞ்சாநெஞ்சன் வீரத்துடன், தேசபக்தி எண்ணத்துடன் இருந்தேன் என்பதை இந்த உலகம் புரிந்துகொள்ளவேண்டும்.

ஜீலியஸ் பியூஸ்க் அன்று தூக்குமேடையிலே மாண்டார். ஆனால், சாவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னால், மரணமில்லா புகழ் படைத்த இலக்கியம் ஒன்றின் ஆசிரியராக விளங்கினார் என்பதை, கொஞ்சம் காலம்