பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

37


நிறைந்த சிறந்த படைப்பு என்று அந்த நூலைப் பற்றி நியூ டைம்ஸ் என்ற பத்திரிக்கை புகழ்ந்து எழுதியிருந்தது.

இத்தகைய அஞ்சா நெஞ்சம் கொண்ட விடுதலை மாவீரன் ஜீலியஸ் பியூஸிக் செக்கோஸ்லேவியா என்ற நாட்டிலுள்ள, பிரேக் நகரில் 1903-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ம் தேதி பிறந்தார். அவர் ஓர் ஏழை உருக்காலைத் தொழிலாளியின் மகன். பிரேக் பல்கலைக் கழகத்தில் அம்மாவீரன் இலக்கியம், இசை, கலை ஆகிய துறைகளில் பயிற்சி பெற்றார். கல்வி கற்கும் காலத்தில் மாணவர் இயக்கங்களில் தீவிரமாகத் தொண்டாற்றினார். 1929ஆம் ஆண்டில் சிருஸ்டி என்ற ஒரு பத்திரிக்கை ஆசிரியராக இருந்தார். கனல் கக்கும் அவருடைய தேசபக்தி எழுத்துகளைக் கண்டு விடுதலைத் தத்துவத்திற்கு எதிரானவர்கள் கலங்கினார்கள், அஞ்சினார்கள். எப்படியெல்லாம் அவரைத் துன்பங்களில் சிக்க வைக்கலாம் அல்லது அழிக்கலாம் என்று திட்டமிட்டார்கள். தாய் மண்ணுக்கு விரோதமான இந்தத் துரோகிகளின் போக்கினை அம்மாவீரன் தெரிந்து கொண்டார். எந்த விதக் காரணமும் இல்லாமல் இந்த சூதுமதியினரின் சூழ்ச்சியில் சிக்கிச் சாவதைவிட, நாட்டுக்காக தொண்டாற்றி சாவதே மேல் என்று தனது உடலில் கடைசி மூச்சு உள்ள வரை நாட்டுக்குத் தொண்டாற்றுவதையே உன்னத நிலை, உயர்ந்த சேவை என்று கருதிய பியூஸிக் தலைமறைவாகத் தப்பிவிட்டார்.