பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

உலக வரலாற்றில்




அவரின் தலைமறைவு வாழ்க்கையின் போதும் ஓய்ந்து கிடக்கவில்லை, அப்போதும் கூட ஒரு செய்தித் தாளை துவக்கி நடத்தினார். மக்கள் மத்தியிலே அந்தப் பத்திரிக்கை பெரும் புகழ் பெற்றது. ஆனால், அதை அச்சு அடிக்கும் இடத்தை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் முகவரியும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் இட்லரின் நாஜிப் படையை எதிர்த்து நூற்றுக்கணக்கான சிறு சிறு துண்டுகளை வெளியிட்டார்.

பிறகு 1930ஆம் ஆண்டில் சோவியத் யூனியனுக்கு அவரை செக்கோஸ்லேவியா நாட்டுத் தொழிலாளர்கள் அனுப்பி வைத்தார்கள். அங்கே சென்று திரும்பி வந்த பியூஸிக் சோவியத் யூனியனின் சோசலிசத் தத்துவத்தின் சிறப்புகளை கண்டு ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இவ்வாறு அவர் பல நூல்களை எழுதினார். அவற்றில் ஒன்று தாயகத்தை நேசிக்கிறோம் என்ற நூல். இந்த நூல் விடுதலைப் போராட்டக் காலத்தில் செக் நாட்டு தொழிலாளர் வர்கத்தின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு எழுச்சியை உருவாக்கிப் புரட்சியைத் தூண்டிவிட்டது. பியூஸிக் எழுதிய கவிதைகள் ஏராளம். அவரது கவிதைகள் ஒவ்வொன்றும் மக்களிடையே தேசபக்திக் கனலை தூண்டிவிடும் போர்க்கருவியாக இருந்தது.

‘உலகின், நண்பர்களான உங்கள் அனைவரையும் நெஞ்சார நேசிக்கிறேன். அயர்ந்துவிடாதீர்! விழிப்புடன் இருங்கள். ஆம்! விழிப்புடன் இருங்கள் என்று தன்