பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

39


மனைவிக்கு எழுதிய தூக்குமேடை குறிப்புகள் என்ற வீர வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாடு விடுதலை அடைவதற்கு எத்தகைய எழுச்சிகள், எப்படிப்பட்ட உணர்ச்சிகள் மக்களிடையே உருவாக வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கிய சுதந்திர மாவீரன் தூக்குமேடையில் முழங்கிய முழக்கம் அவன் இறந்ததற்கு பிறகு செக் நாட்டு மக்களின் உயர் வாழ்க்கை முழுமையடைய வேண்டும் என்ற சுதந்திர தாகத்தை ஊட்டியது.

 


கிரேக்க நாட்டின் அரசியல் கலைஞர்

1964-ஆம் ஆண்டு

கிரேக்க நாட்டுப் பொதுத் தேர்தல்

இரண்டு கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. ஒன்று ஐக்கிய கட்சி. மற்றொன்று கம்யூனிஸ்ட் கட்சி. மத்திய ஐக்கிய நடைபெற்ற தேர்தலில் 53 சதவிகிதம் வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது. கம்யூனிஸ்ட் கட்சி 13 சதவிகிதம் வாக்காளரின் ஆதரவு மட்டுமே பெற்றது. அதனால் தோல்வி அடைந்தது.