பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

41


உருவாக்கின. கஷ்டங்களைப் பாராமல் இவர் நாட்டிலே எட்டுத் திசைகளிலும் பன்முறை சுற்றிச்சுற்றி வந்து மக்கள் கூட்டங்களிலே சொற்பொழிவு ஆற்றினார். தொழிலாளர் துயரங்களையும், வேதனைகளையும் படும் கஷ்டங்களையும் மக்களிடையே விளக்கி முழக்கமிட்டார். கரமன் லிஸின் ஆட்சி நிர்வாகத்தை அதன் அலங்கோலத்தை, ஆணவப் போக்கை, ஏதேச்சாதிகாரத்தன்மையை, நிர்வாகப் பலவீனத்தை மக்களிடையே வன்மையாகக் கண்டித்து காரணகாரியங்களோடு சுட்டிக் காட்டினார். இவருடைய நீண்ட கால அரசியல் அனுபவமும், அரசியல் வாதிகளிடையே இவருக்கு இருந்த கவுரமும், மக்கள் மன்றங்களிடையே இவர் உருவாக்கி வைத்திருந்த மதிப்பும், மரியாதையும் இவரது வயதும் மக்களிடம் போராதரவு பெற மிக உதவிகரமாக இருந்தன.

ஜார்ஜ் பாபன் திரியோ மிகச்சிறந்த நாவலர். இன்று வரையில் இவரைப்போல் நாவன்மை படைத்த, நுட்பமான இராஜ தந்திரம் மிக்க ஒரு பேச்சாளரை அந்த நாடு கண்டதில்லை. நாடாளும் அனுபவங்கள் ஏராளமாகப் பெற்றவர், படித்த மேதை, சிறந்த கல்வியாளர், இலக்கியத்தில் வரம்பு மீறிய பற்றுக் கொண்டவர், வசனம், கவிதை இந்தத் துறைகளை விட நாடக இலக்கியத்தில் இவருக்குக் கவர்ச்சி அதிகம். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இவர், கல்வி அமைச்சராகப் பதவி வகித்து நாட்டு நிர்வாகத்தில் பதவி ஏற்றபோது, நாட்டில் தேசிய நாடக