பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

உலக வரலாற்றில்




விடுதலைப் புரட்சிக்கு வித்திட்ட வீரராக திகழ்ந்த ஜூவான் பாஷ் ஒரு சிறந்த இலக்கிய வித்தகர். இன்றைய தலைமுறையின் இலத்தின் அமெரிக்கா எழுத்தாளர்களில் ஜூவான் பாஷக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. அரசியல், சமுதாய, முற்போக்குக் கருத்துக்களைக் கொண்ட நூல்கள் மட்டுமன்றி சிறந்த சிறுகதைகளையும் எழுதியுள்ளார். தம்முடைய தாய்மொழியில் இவர் எழுதிய பல நூல்கள் ஆங்கிலம், ப்ரெஞ்சு மொழிகளில் மொழி பெயர்க்கபட்டுள்ளன. டொமினிகன் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால் ஐரோப்பிய நாடுகளில் இவர் சுற்றுப்பயணம் வந்தார். அந்தந்த நாடுகளில் அரசியல்வாதிகள் சமுகத்தொண்டர்கள் தொழிலதிபர்கள், தொழிலாளர் சங்கத் தலைவர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், கல்வி அதிகாரிகள் போன்றவர்களைச் சந்தித்து அவர்களுடன் அளவளாவி அவர் அனுபவம் பெற்றுத் திரும்பி வந்தார். உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஐரோப்பிய தலைவர்களையும் லத்தின் அமெரிக்காவைப் பற்றி எழுதியுள்ள நூலாசிரியர்களையும் பேட்டி கண்டார்.

டொமினிக்கன் குடியரசுக்கு சமுதாய அரசியல் துறைகளில் எப்படிச் சீர்திருத்தங்கள் செய்யப் போகிறார் என்ற கேள்வி இந்தப் பேட்டியில் கேட்கப்பட்டது. இதற்கு ஜூவான் பாஷ் பதில் கூறும் போது எங்கள் நாட்டு மக்களுக்கு, மக்களாட்சி என்னவென்று தெரியாது.