பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

47


பொருளாதார, சமுதாய, அரசியல் துறைகளில் சுதந்திரம் பெறுவது என்பது கனவிலும் பெறாத ஓர் அனுபவம். எனவே, ஏட்டுச் சீர்திருத்தங்கள் ஏட்டளவிலே இல்லாமல் பயன்தரத்தக்க அளவில் செயல்படச் செய்வது கால அட்டவணையில் முதலிடம் பெற வேண்டும்.

மற்றொரு கேள்வி அவரிடம் கேட்டப்பட்ட போது விவாசாயத் துறையில் இவர் சீர்திருத்தம் செய்வதற்கு என்ன திட்டம் போடுவார் என்பதற்கு அவர்கூறிய பதில் வருமாறு:

“சர்வாதிகாரி ட்ருஜில்லோ ஆட்சியில் நாட்டில் பெருவாரியான நிலம், சர்வாதிகாரியான அவருடைய சுற்றத்தார்க்குச் செந்தமாக இருந்தது. இப்போது அந்த நிலத்தை பாட்டாளிகளுக்குப் பங்கிடுவது முதல் சீர்திருத்தமாகும். பிறகு கூட்டுறவு இயக்கத்தை தோற்றுவித்து அதன் மூலம் இந்த நிலத்தின் விளைச்சல் பொருளை விற்பனை செய்து பாட்டாளிகளுக்கு போதிய அளவு ஊதியம் கிடைக்க வழி தேடவேண்டும். பாட்டாளிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு ஏறத்தாழ நூறு டாலர் விகிதம் பெற தக்க ஊக்கம் அளிக்க வேண்டும். உழைப்பாளிகளுக்கு நிலம் தங்கள் சொத்து என்கின்ற உறுதியும் கூட்டுறவு இயக்கம் தங்கள் பொருளாதார உதவிக்கு முன்னேற்றதிற்கு அமைந்த ஒரு கருவி என்ற மனப்பான்மையும் வளர அடிகோல வேண்டும் என்று கூறினார்”