பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

உலக வரலாற்றில்



டொமினிகன் நாட்டிற்கு அண்டை நாடான ஹெய்டியில் சர்வாதிகாரமான நிர்வாகம் இயங்குகிறது. எல்லைப் புறத்தில் இத்தகைய நிர்வாகம் நடப்பது நாட்டிற்கு தீமை விளைவிப்பதாகும். எனவே ஜூவான் பாஷ் இந்த பிரச்சனைக்கு மிகவும் எச்சரிக்கையுடன் தீர்வுகண்டார்.

இவர் சிறு வயதில் ஹெய்டி நாட்டில் பிறந்து வளர்ந்தவர். அதனால் அந்த நாட்டின் மீது அவருக்கு ஒரு தனி அபிமானம் இருந்தது. ஆதலால் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் ஹெய்டி நாட்டுடன் சண்டை சச்சரவு, தகராறு, கலவரம் எதுவும் உருவாகாத விதத்தில் தீர்க்கப்பட வேண்டும் என்று சிந்தித்து முடிவுகண்டார்.

ஜூவான் பாஷ் தலைமையில் இயங்கும் டொமினிகன் குடியரசு நாடு எதிர்காலத்தில் மிக உயர்ந்த உன்னத சிறப்படையும் என்று மக்கள் எதிர்பார்த்து வாழ்கிறார்கள். அவர்கள் எண்ணம் என்னவோ அதற்கேற்றவாறு ஆட்சியும் நடைபெற்றது.


அமெரிக்க காந்தி மார்ட்டின் லூதர் கிங்

அமெரிக்க நாட்டின் வெள்ளைகாரர்கள் அங்குபோய் ஒண்டி வாழ்ந்து வந்தவர்கள். அங்குள்ள நீக்ரோ மக்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்தி சொல்லமுடியாத