பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

49


கொடுமைகளுக்கு ஆளாக்கி அழிக்க முற்பட்டனர். நிக்ரோ இனத்தவரிடையே அடிக்கடி இனஉரிமை உணர்ச்சி எழுந்தது. ஆனால் அந்த உணர்ச்சி பலாத்கார வெறி உணர்ச்சியாகப் பல முறை வெடித்தது. வெள்ளைக்காரர்கள் நிக்ரோ மக்களின் இனஉரிமை போராட்டத்தை வன்முறைகளைக் கொண்டே அழித்து வந்தார்கள். இந்த நேரத்தில் மார்ட்டின் லூதர் கிங் புது வாழ்க்கையில் ஈடுபட்டார். வன்முறை வெறிக் கிளர்ச்சி எந்த காலத்திலும் வெற்றி பெறாது என்பதை கிங் உணர்ந்தார். சட்டத்திற்கு உட்பட்ட அகிம்சை அடிபடையிலான அறப்போர் என்றும் தோல்வியுறாது என்பதைப் புரிந்தார்.

கத்தியின்றி, இரத்தமின்றி, அறப்போராட்ட அடிப்படையிலே அடிமைத் தளையை அறுத்தெறிந்து விடுதலை பெற்று சுதந்திர சுகம் அளிக்கும், காந்தியடிகளின் அகிம்சைத் தத்துவம் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு ஒரு பாடமாக அமைந்தது. ஆனால் காந்தியடிகளை தனது அரசியல் ஆசானாக ஏற்றுக் கொண்டதினால் அவரை அமெரிக்க காந்தி என்று நீக்ரோ மக்கள் அழைத்தார்கள். தனது இனமக்களின் உரிமை உணர்வை ஒற்றுமைப்படுத்தி, ஒழுங்குபடுத்தி, அதன் போக்கை, செயலை, நடவடிக்கைகளை, காந்திய வழியில் திருப்பிவிட்டார்.

நீக்ரோ மக்களின் உரிமை நோக்கத்தை அமெரிக்கா முன்னாள் குடியரசுத் தலைவர் கென்னடி மனப்பூர்வமாக ஏற்று அதைச் சட்டமாக்க வழிவகுத்தார். அவருக்கு பிறகு