பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

உலக வரலாற்றில்



தனது இன மக்களான நீக்ரோவினர், தாய்நாட்டில் வெள்ளையரின் பயங்கரக் கொடுமைகளுக்குப் பலியாகி நலிந்த காட்சி கிங் நெஞ்சத்தை உருக்கியது. காந்தியடிகளின் தத்துவம் உலகத்துக்கு ஒரு புதுமையாக விளங்கியதால். அதன் வழிவகைகளும் கிங் சிந்தனையைத் தூண்டிவிட்டன. தன் இனத்தவர் முன்னேற, சமத்துவம் பெற, காந்திவழி அல்லாமல் வேறு வழியில்லை என்ற முடிவிற்கு கிங் வந்தார். காந்தியடிகளின் தத்துவம் பற்றி பல மேடைகளில் கருத்துரையாற்றி நீக்ரோ மக்களின் மனத்தை பண்படுத்தி உரம் ஏற்றினார். இவருடைய காந்திய தத்துவ சொற்பொழிவினால் ஈர்க்கப்பட்ட வெள்ளையர் பலர் ஆவர். ஆங்கில இளைஞர்களும், மாணவிகளும் கிங் ஆற்றிய தத்துவ விளக்கத்தால் அவரைப் பின்பற்றலானார்கள். கிங்கினுடைய இலட்சியப் போராட்டத்திற்கு உலக மக்களது ஆதரவும், அனுதாபமும் ஏற்பட்டன. அவரதுக் கருத்துகளை கேட்க உலகமெங்கும் உள்ள முற்போக்கு வாதிகள், பகுத்தறிவுவாதிகள், மனித நேயவாதிகள் விருப்பம் கொண்டனர். உலகத்தின் பல பாகங்களுக்கும் சொற்பொழிவாற்ற வருமாறு அவருக்கு அழைப்புகள் வந்தன.


கிங் நடத்திய முதல் போராட்டம் பேருந்துக் கிளர்ச்சி அறப்போராகும். அமெரிக்காவில் பஸ்களில் பயணம் செய்யும் போது வெள்ளையர்கள் ஏறினால் நீக்ரோக்கள் எழுந்து தம்முடைய இருக்கையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். தவறினால் அடி, உதை, குத்து, வெட்டு,