பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

53


ஆங்கிலேயர்களான பஸ் அதிபர்களும் நீக்ரோக்களுக்கு எதிராகவே செயல்பட்டனர். கிங் இந்தப் பழக்கவழக்கத்தை எதிர்த்தார். நீக்ரோக்கள் அனைவரும் பேருந்துகளை பகிஷ்கரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர் கூறியவாறு நீக்ரோ மக்கள் பஸ்ஸில் ஏறுவதை நிறுத்திவிட்டார்கள். இதனால் பஸ் அதிபரின் பாடு நெருக்கடி ஆகிவிட்டது. பஸ்ஸில் கூட்டம் படு மோசமாக குறைந்துவிட்டது. பஸ் நிறுவனங்களில் முக்கியமான வேலைகளை வகித்து வந்த நீக்ரோக்கள் தங்களது வேலைகளைத் தூக்கி எறிந்து வெளியேறினார்கள். இதனால் பஸ் தொழிலே நிலைகுலைந்தது.

பேருந்து உரிமையாளர்கள் கிங்கிற்கு இலஞ்ச ஆசை காட்டி மயக்கினார்கள். மயங்கவில்லை லூதர்; மிரட்டிப் பார்த்தார்கள், மிரளவில்லை லூதர். கடைசியாக எல்லா பஸ் அதிகாரிகளும் ஒன்று கூடி கிங் மீது வழக்குத் தொடுத்தார்கள். கிங் தூண்டுதலால் பஸ் தொழிலே நசிந்துவிட்டதாக குறைகூறினார்கள். நாட்டின் பெரிய வழக்குரைஞர்களெல்லாம், பஸ் உரிமையாளர்களுக்கு ஆதரவாக வாதாடி வந்தார்கள். மார்ட்டின் லூதர் கிங் தானே தனித்து நின்று வெள்ளையர்களை எதிர்த்து, தனது இன மக்களுக்காக வாதாடினார்.

உலக மக்களைக் கவர்ந்த அந்த வழக்கு இறுதியில் நீக்ரோ மக்களுக்கு ஆதரவான தீர்ப்பு வழங்கியது. பஸ்களில் வெள்ளையருக்கு சமத்துவமான உரிமை நீக்ரோ மக்களுக்கு உண்டு என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். வழக்கின் முடிவு