பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

55


அமெரிக்க ஆட்சியினர் சட்டமாக்கினர். இனி அமெரிக்காவில் எந்த நிலையிலும் நீக்ரோ இன மக்களுக்கு சம உரிமை உண்டு. அந்த உரிமையைத் தடுப்பவர்கள் சட்டபடி குற்றவாளியாவார்கள்.

இந்த நீக்ரோ இன சமத்துவ சட்டம் மனிதநேய உரிமையைப் பாதுகாக்கும் சட்டம் அமெரிக்கா அரசினால் கொண்டுவரபடுவதற்கு, காந்தியடிகளது அறப்போர் வழியைப் பின்பற்றி அகிம்சா தத்துவப்படி போராடிய அமெரிக்க காந்தி என்று அழைக்கப்படும் மார்ட்டின் லூதர் கிங் தனது இன மக்களுக்காகத் துப்பாக்கியால் சுடப்பட்டு துடிதுடித்து பலியானார்.


சரித்திரம் சமைத்த சான்றோன் சர்ச்சில்

சூரியன்மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அதிகாரம் நாஜி போர் வெறியன் இட்லரால் பறிபோய் விடுமோ என்ற பயங்கர நிலை இரண்டாவது உலக யுத்த காலத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு இருந்தது. கொஞ்சம் அயர்ந்திருந்தால் அல்லது அலட்சியமாக இருந்திருந்தால் இங்கிலாந்து என்ற நாடே தெரியாமல் சுடுகாடாக மாறிவிட்டிருக்கும்.

சுதந்திரத்திற்கு சவாலாக அமைந்த நெருக்கடியான அந்தப் போர்க்கால நேரத்தில் துணிந்து முன்வந்து பொறுப்பேற்று இங்கிலாந்து நாட்டைக் காப்பாற்றிய பெருமைக்குரிய இரும்பு மனிதர் சர்வின்சென்ட் சர்ச்சில்.