பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

உலக வரலாற்றில்




இங்கிலாந்தின் சிறப்பிற்கும், பெருமைக்கும், புகழுக்கும், முன்னேற்றத்திற்கும் உழைத்த எத்தனையோ பெருமக்கள் அந்த நாட்டில் தோன்றினார்கள் என்றாலும் இங்கிலாந்து நாட்டின் சுதந்திர சிற்பி என்ற புகழிற்கு இலக்காக இருந்தவர் பிரதமர் சர்.வின்சென்ட்சர்ச்சில்தான்.


இங்கிலாந்து நாட்டை இழந்தாலும் இழப்போம், ஆனால், ஷேக்ஸ்பியர் இலக்கியத்தை இழக்கமாட்டோம் என்று உலக இலக்கிய உலகிற்கு சவால் விட்ட இலக்கிய மேதை பிரதமர் சர்.வின்சென்ட்சர்ச்சில்.90 வயதுக்குமேல் பழுத்த பழமாக, கனிந்த கனியாக, நிறை வாழ்வு வாழ்ந்து சரித்திரம் சமைத்த சான்றோன் என்ற பெருமையை நிலைநாட்டிவிட்டு மறைந்த மாமேதை தான், பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் சர்.வின்ஸ்சென்ட்சர்ச்சில்.


அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் மறக்கமுடியாத அற்புத ராஜதந்திரியாக விளங்கியவர். அவருடைய அறிவாற்றல் மிக்க நாவன்மைப் பேச்சுகள், சுறுசுறுப்பான சாதனைகள், நுட்பமான சிந்தனைகள், நுண்மாண் நுழைப்புல நூலறிவுகள், கம்பீரமான தோற்றத்தின் உணர்வுகள் ஆகியவற்றால் அவர் உலகத்தின் மாமனிதராக நடமாடினார். விடுதலைப் போராட்டக்காலத்திலே சர்ச்சில் இந்தியருக்கு நேர் விரோதியாக இருந்தார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து இந்தியாவைப் பிரிப்பதா என்றார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மணிமுடியிலிருந்து இந்தியா என்ற ஒளிமிக்க ஒரு வைரத்தை தூக்கி எறிவதற்காக நான் ஆட்சி பொறுப்பை ஏற்கவில்லை என்று சர்ச்சில் பிரதமராக