பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

57


இருந்த போது அன்றைய பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் முழக்கமிட்ட அந்த ஆவேசம் இந்தியர்கள் நெஞ்சைத்திலே எரி ஈட்டிபோல் எரிந்தன.

இவ்வாறு அவர் முழக்கமிட்டபேச்சின் உணர்வுகளிலே பொங்கி வழிந்த அவரது தேசபக்தியை நாம் தெளிவாகப் பார்க்கமுடிகிறது. இவருக்கு இருந்த அந்த உணர்வு இந்திய மக்களுக்கு இருக்காதா? சர்ச்சிலின் மனப்பண்பை இரண்டு கோணங்களில் நின்று பார்க்கலாம். இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் எதிரான துருவ கோணங்களாகும்.

இந்திய விடுதலைப் போர் காந்தியடிகள் தலைமையிலே நடைபெற்றபோது, இர்வின் பிரபு 1931-32ம் ஆண்டில் இந்தியாவின் வைசிராயாக இருந்தார். அக்காலத்திலே காந்தி-இர்வின் ஒப்பந்தம் என்ற ஓர் உடன்படிக்கை ஏற்பட்டது.

அந்தப் பேச்சின்போது காந்தியடிகள் கலந்து கொண்டதைப் பற்றி இங்கிலாந்து பாராளுமன்றத்திலே வின்ஸ்டன் சர்ச்சில் என்ன பேசினார் தெரியுமா?

“ஒரு காலத்தில் இரண்டாந்தர வழக்குரைஞராக இருந்த காந்தி, இப்போது அரசநிந்தனைப் பரதேசியாகி இருக்கும் இந்த ஆள், அரசப் பிரதிநிதியின் மாளிகைப் படியிலே அரை நிர்வாணப் பக்கிரிக்கோலத்தோடு ஏறி இருக்கிறார். மாட்சிமை மிக்க மன்னரின் பிரதிநிதியுடன் சரிசமானமாய்