பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

உலகவரலாற்றில்


அமர்ந்து பேசுகிறார். இந்தக் காட்சியை நினைக்கும் போது என் நெஞ்சம் கொந்தளிக்கின்றது. அருவருப்பும் - அவமானமும் அடைந்து நான் துடிக்கிறேன்.” என்றார்.

அடுத்து. இந்தியாவில் ‘ஜாலியன் வாலாபாக்’ என்ற படுகொலை நடந்த நேரம். இந்தப் படுகொலையை பிரிட்டிஷ் அரசு சார்பாக ஜெனரல் டயர் என்ற கொடியவன் நடத்தினான். இந்தச் செய்தியை கேள்விப்பட்ட சர்ச்சில் துடிதுடித்து “மன்னர் பிரானின் அன்புக்குப் பாத்திரமான மக்களை ஈவிரக்கம் கொஞ்சமும் இல்லாமல் படுகொலை செய்தவன் எவனாக இருந்தாலும், அவனைக் கடுமையாகத் தண்டித்தே ஆகவேண்டும்” என்றார்.

இந்த இரண்டு பேச்சுக்களால் நாம் புரிந்து கொள்வது என்னவென்றால், சர்ச்சில் இந்திய மக்களை வெறுக்கவில்லை; தனிப்பட்ட முறையில் அவர் காந்தியடிகளையும் கோபிக்கவில்லை; ஆனால், இந்தியா பிரிட்டிஷ் பேரரசின் ஒரு பகுதியிலே இருந்து பிரிந்து போகிறதே என்ற சாம்ராஜ்ய மனப்போக்கு, இந்தியாவை இழப்பதைப் பற்றிய சிந்தனை, அவரது மனத்திலே கொந்தளிக்கும் கோபத்தை உண்டாக்கி விட்டதை அல்லவா தெரிவிக்கின்றது?

இதுபோலவே, 1950-ம் ஆண்டிலே மற்றொரு சம்பவம். நம்முடைய பண்டித நேரு அவர்கள்,