பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

59


இந்தியாவின் பிரதமர் பொறுப்பை ஏற்ற பிறகு, அமெரிக்கா சென்றிருந்தார். திரும்பி இந்தியாவரும் போது, இங்கிலாந்து நாட்டில் குறிப்பாக லண்டன் மாநகரில் சில நாட்கள் தங்கியிருந்தார்.

அப்போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் அட்லி பிரபு. அவர் ஒரு விருந்து நமது நேரு அவர்களுக்குக் கொடுத்தார். அந்த விருந்தின் போது அட்லி பிரபு பண்டிதநேருவுக்கு சர்சிலை அறிமுகப்படுத்தினார். நட்புறவோடு சர்ச்சில் நேருவின் கைகளைப் பற்றிக் குலுக்கித் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தபோது;

“எனக்கு ஒர் ஆசை, நானும் உங்களுடன் அமெரிக்காவுக்குச் சென்று அமெரிக்க மக்களுக்கு உங்களை அறிமுகப்படுத்த வேண்டும். அத்தகைய ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கும்போது என்ன சொல்லுவேன் தெரியுமா?

“இதோ இந்தப் பெரிய மனிதர் பகைமையையும், பயத்தையும் வென்றவர்!” என்று தான் கூறியிருப்பேன்" என்றார் சர்ச்சில்.

சர்ச்சிலின் பாராட்டுரையைக் கேட்ட பிரதமர் நேரு, இது எனது தகுதிக்கு மீறிய மிக உயர்ந்த புகழுரை என்று அவருக்கு நன்றி தெரிவித்தார்.