பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

65



இராணுவப் பயிற்சி முடிந்த முஸ்தபா கமால் துணைப்படை ஒன்றுக்குத் தளபதி ஆனார்.

அந்த நேரத்தில் அவரது தாயார் சபீதா மறுமணம் செய்து கொண்டதால், தாயாரை வெறுத்தார் இருவருக்கும் எந்த உறவுமில்லை என்று கட்டறுத்து விட்டு, தன்மனம் போல தனிமையான வாழ்வை ஏற்றார்!

கமால், கான்ஸ்டாண்டி நோபிள் என்ற நகரில், அரசியல் தொடர்புடைய பல சங்கங்களது கொள்ளைகளைப் புரிந்து கொண்டார்.

துருக்கி நாட்டை அப்போது ஆண்டு கொண்டிருந்த சுல்தான் அப்துல் அமீது, ஒரு கொடுங்கோல் மன்னனாக மாறி, அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டு, மக்களைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார். அந்த சுல்தானுடைய ஆணவ ஆட்சியை அகற்றி புரட்சிகரமான ஓர் ஆட்சியை அமைத்திட அப்போதைய வாலிபர்கள் திட்டமிட்டுக் கொண்டிருந்த சங்கங்களிலே கமாலும் ஓர் உறுப்பினரானார்!

சுல்தானுடைய கொடுங்கோல் அதிகாரிகள் அந்தப் புரட்சி இளைஞர்களை எல்லாம் வேட்டையாடிப் பிடித்தார்கள்! விசாரணை செய்தார்கள்! சிறையிலே தள்ளினார்கள்! சித்திரவதை செய்தார்கள்! இவர்களில் முஸ்தாபா கமால் ஒருவர்தான் தப்பினார்!

தப்பினார் என்றால், அதிகாரிகளை ஏமாற்றிவிட்டுத் தப்பியோடிவிட்டார் என்பதல்ல; முஸ்தாபா கமாலின் ராணுவத்திறமை படை நடத்தும் பயிற்சி திட்டமிட்டுச்