பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

உலக வரலாற்றில்


செயலாற்றும் யூகம் இவற்றை மனத்தில் கொண்ட சுல்தான், என்றாவது ஒருநாள் கமால் மனம் மாறும்போது, அந்தத் திறமைகள் அனைத்தும் சுல்தானின் எதிரிகளை எதிர்கொண்டு சமாளிக்க உதவும் என்ற சுயநல எண்ணத்தால்” முஸ்தபாவை மட்டும் விடுதலை செய்து, டெமாஸ்கஸ் நகரத்துக்கு அனுப்பப்பட்டார்!

போன இடத்திலாவது கமால் சுகபோகமாக இருந்தாரா என்றால் இல்லை! அங்குள்ள புரட்சிவாதிகளின் இயக்கங்களிலே, அவர்களது அரசியல் புரட்சிச் சதிகளிலே ஈடுபட்டார். அதிகாரிகள் அவரைக் கைது செய்யச் சென்ற போது கமால் தப்பி சொந்தஊரான சலோனிகா நகருக்கு ஓடிவிட்டார்.

சரோனிகா சென்ற கமால், அங்குள்ள புரட்சிக்காரர்களுடன் சேர்ந்து, அவர்களுக்குத் தலைவரானார். ஆனால், எதிலும் அவசரப்படாமல், அரைகுறை புரட்சித் திட்டங்களில் ஈடுபடாமல் காலத்துக்காக அவர் காத்திருந்தார்.

அந்த நேரத்தில் மாசிடோனியாவின் கிழக்குப்பகுதியில் அன்வர் என்பவர் தலைமையில் திடீரென ஒரு புரட்சி ஏற்பட்டது. அதை அடக்கிடச் சென்ற ராணுவம் அந்தப் புரட்சிக்காரர்களுடனேயே சேர்ந்துவிட்டது.

தான் நம்பி அனுப்பிய ராணுவப்படையே நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதைக் கண்ட சுல்தான், தனது ஆலோசனை சபையைக் கலைத்துவிட்டார். புரட்சிக்-