பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

67


காரர்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர்களிடம் சமரசம் பேசி புரட்சிக் காரர்கள் பங்கேற்ற ஓர் ஆலோசனை சபையைப் புதிதாக உருவாக்கினார்.

சுல்தான் சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்றவாறுதான் புதிய சபையை உருவாக்கினார்! அதே நேரத்தில் சுல்தான் எடுபிடிகள், ஜால்ராக்கள், ஆதரவாளர்கள், எல்லோருமாக தனித்தனிப் பலத்தோடு சுல்தானிடம் பணம் பெற்றுப் புரட்சிக்காரர்களுக்கு லஞ்சமாகக் கொடுத்து அந்த ஆலோசனை சபையினர்களையே துரத்தியடித்தார்!

மாசிடோனியா புரட்சிவாதியான அன்வரை, முஸ்தபா கமால் சந்தித்து, இருவரும் ஒரு திட்டம் தீட்டி சிதறுண்ட புரட்சிக்காரர்களைப் படையாகத் திரட்டி, அங்குள்ள சுல்தானின் படையோடு மோதவிட்டு, முறியடித்தார்கள்.

துருக்கி சுல்தானாக இருந்த அப்துல் ஹமீது பதவியிலே இருந்து விரட்டப்பட்டார். புரட்சிக்காரர்களின் எண்ணத்திற்கேற்ப, ஒரு புதிய சுல்தானை அன்வர் விருப்பப்படி முஸ்தபா நியமனம் செய்தார்.

துருக்கியில் ஏற்பட்ட அந்த சுல்தான் விரட்டல் புரட்சியில் முஸ்தபா கமால் உழைப்பு, யோசனை, வியூகப் போர் அதிகமிருந்தன என்று தெரிந்திருந்த அன்வர், முஸ்தபாவை ஒரு படைக்குத் தளபதியாக்கி விட்டு, வேண்டுமென்றே புதிய சுல்தானை உருவாக்கியதை, முஸ்தபா ஆழ்ந்து யோசித்த படியே இருந்தார்.