பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விடுதலை வீரர்கள்

5


இல்லை. அந்த தேசபக்த மாவீரர்களின் வரிசையிலே முதலிடம் வகிப்பவர் வங்கம் தந்த விடுதலைச் சிங்கம் நேதாஜி ஆவார்.

விடுதலை வீரர் சுபாஷ் சந்திர போஸை மக்கள் நேதாஜி என்றும் அழைப்பதுண்டு. அவர் விடுதலைப் போர் முறையிலே காந்தியடிகளிடம் வேறுபட்டு இருந்தாரே தவிர மாறுபட்டவராக இருக்கவில்லை. போர்முறையில் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் நேதாஜி, மகாத்மா காந்தியினை மதிப்பிற்குரிய தலைவராக இறுதிவரை எண்ணியவராவர்.

காந்தியடிகளின் அறப்போர், சூரியன் மறையாத பிரிட்டீஷ் சாம்ராஜியத்தை இந்தியாவில் வேர் அறுக்குமா என அவர் உள்ளத்தில் தோன்றிய எழுச்சியின் விளைவாக விடுதலைக்கு தனிவழியே சென்று போராடினாரேயன்றி காந்தியடிகளுக்கு விரோதமாகச் செயல்படவேண்டும். என்பது அவர் நோக்கம் அல்ல. இந்திய நாடு விடுதலை பெற்றபின்னர்நேதாஜி உயிருடன் இருக்கும் வாய்ப்பினை பெற்றிருப்பாரானால் காந்தி வழிதான் வலிமைபடைத்தது என்ற அகிம்சை உண்மையினை அறிந்து அடிகளின் தலைமையினை மீண்டும் ஏற்றுநம்முடைய இந்திய நாட்டு குடியரசை முன்னேற்றுவிக்கும் அரும்பணியில் முன்வரிசையில் நின்றிருப்பார். அந்தப் பெரும் பேறு நமக்கு கிடைக்காதது துரதிர்ஷ்டமே ஆகும்.